விரைவில் அமைச்சரவை மாற்றம்? 

எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, ஆளும் கட்சியிலிருக்கும்  சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள், மூவருக்கே இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மொட்டுக் கட்சியிலிருந்து பிரிந்து மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைய எஸ்.பி திஸாநாயக்க அண்மையில் முடிவெடுத்திருந்த நிலையில் அவருக்கு பதவி வழங்கப்படவுள்ளதோடு, டிலான் பெரேரா, அநுரபிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டவர்களும் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு குறித்து கடும் அதிருப்தியிலேயே இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like