கோட்டா-சீன ஜனாதிபதி தொலைபேசியில் பேசியது இதுதானா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பினுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த தொலைபேசி கலந்துரையாடல் நேற்று நிகழ்ந்துள்ளதுடன், அதன்போது சீன ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துதலையும் தெரிவித்திருப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உபாயமார்க்க பொருளாதார திட்டம், இலங்கையிலுள்ள சீன வேலைத்திட்டங்கள், வர்த்தக செயற்பாடுகள் என பல விவகாரம் பற்றியும் இதில் பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மலர்ந்திருக்கும் புதுவருடத்தில் சீனா – இலங்கையின் உறவு மென்மேலும் பலம்பெற வேண்டும் என்ற புதுவருட வாழ்த்துதலை அந்நாட்டு ஜனாதிபதி ஜிங்பின், இலங்கை ஜனாதிபதியிடம் கூறியிருக்கின்றார்.

You May also like