11 இஸ்லாமிய அமைப்புக்கள் மீது தடைகூறி வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 07ஆம் திகதி இனவாத மற்றும் தீவிரவாத நோக்குடன் செயற்படுகின்றதாகக் கூறி 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ)

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ)

ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM)

தாருல் அதர் @ ஜம் உல் அதர்

இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM)

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS)

அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு

சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls)

சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim) ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like