போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு எதிராக மனு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவினால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தனியான அலகாக இயங்குவது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே,  இவ்வாறான மனுவொன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

விசேட பொருளாதார வலயமொன்றை தாபிப்பதை ஏற்பாடு செய்வதற்கும், பதிவுசெய்தல்கள், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை வழங்குவதற்கும், கொழும்பு துறைமுக நகர வலயத்தில் வியாபார நடவடிக்கைகளையும் வேறு செயற்பாடுகளையும் கொண்டுநடாத்துவதற்கே அதிகாரமளிக்கப்பட்ட ஆணைக்குழு சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆணைக்குழு சட்டமூலம், சட்ட விரோத பணச் சலவை, நிதி மோசடி செயற்பாடுகளின் புகலிடமாக போர்ட் சிட்டியை மாற்றும் அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடையது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You May also like