புதுவருடத்தில் பாரிய வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அதிகாரிகள் முஸ்தீபு

புத்தாண்டு விடுமுறையின் பின் மிகப்பெரிய பணிபகிஷ்கரிப்பை செய்வதற்கு பொதுசுகாதார அதிகாரிகள் தீர்மானித்திருக்கின்றனர்.

குறிப்பாக மேல் மாாகணத்தில் இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவும் அவர்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டின் அதிக கொரோனா அச்சறுத்தல் இருந்த மேல் மாகாணத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் கடந்த காலத்தில் இரவுபகல் பாராமல் பணிகளை செய்த நிலையிலும், எந்தவொரு மேலதிக கொடுப்பனவும் கிடைக்கவில்லை.

இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பகுதிகளில் பணிசெய்த பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற அவர்கள், மேற்படி கோரிக்கையை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கமைய வருகின்ற 19ஆம் திகதி இறதிமுடிவு அரசாங்கம் அறிவிக்காத பட்சத்தில் திட்டமிட்டபடி தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

You May also like