அடுத்த வருடம் கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இலங்கை!

அடுத்த 2022ஆம் வருடத்தில் இலங்கை மிகப்பெரிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளது.

அதற்கமைய, ஒரே நாளில் ஒரே நேரத்தில் மில்லியன் மரக்கன்றுகளை நாட்டிய நாடு என்கிற சாதனையை நிகழ்த்தவிருப்பதாக சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் புத்தாண்டினை முன்னிட்டு இன்றுகாலை மரநடுகை நிகழ்வு நடந்தது.

இதில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

You May also like