இலங்கையில் தொடரும் வீதிகளில் மரணங்கள்!

கடந்த 72 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கடந்த 14ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், கடந்த 15ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்திருந்தனர்.

முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளினாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேர்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், வீதி சட்ட ஒழுங்குகளை மீறி பயணிக்கும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, அதிவேக வீதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

You May also like