மே மாதம் காஸ் விலை கூடும்;புதிய விலை இதுதான்!

எதிர்வரும் மே மாதம் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் லிட்ரோ காஸ் 700 ரூபாவிலும், லாப்ஸ் காஸ் 650 ரூபாவிலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

அத்தோடு சிலிண்டர் விலை 200 ரூபா வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், பல பகுதிகளில் விலை இப்போதே அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் தற்போது விற்பனை ஆகின்ற காஸ் விலை 1540 ரூபாயில் இருந்து 2240 ரூபா வரை உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

You May also like