நாமல் நேற்றிரவு மந்திராலோசனை-அமைச்சர்கள் பலரும் பங்கேற்பு?

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மஹிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ நேற்று இரவு மந்திராலோசனை நடத்தியிருக்கின்றார்.

கொழும்பில் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ள இச்சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டதாகவே கூறப்படுகின்றது.

வருகின்ற 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகும்படி நாமலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில்தான் மேற்படி சந்திப்பும் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like