மௌனமாக இருக்கும்படி கர்தினால் கோரிக்கை!

ஏப்ரல் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பொறளை பொது மயான பூமியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு இன்றைய தினம் மலர்இட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இன்று மாலை இந்த நிகழ்வானது இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற வருகின்ற 21ஆம் திகதி இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்கப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அன்றைய தினத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அண்மையில் தன்னால் தெரிவிக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான கருத்தை சிலர் திரிபுபடுத்திவிட்டதாகவும் கர்தினால் ஆண்டகை கூறினார்.

You May also like