மீண்டும் சந்திப்பிற்கு அழைத்த பிரதமர்-4ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டம்!

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான தீர்க்கமான கலந்துரையாடல் எதிர்வரும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது

இதற்கான அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணிக்குள் இருக்கின்ற கட்சித்தலைவர்களுக்கு விடுத்திருப்பதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதற்கமைய இந்த சந்திப்பானது 4ஆம் திகதி காலை 6.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

பிரதமர் தலைமையில் கட்நத 19ஆம் திகதி கட்சித்தலைவர்கள் சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்ற போதிலும், கட்சித்தலைவர்கள் அல்லாதவர்களும் பங்கேற்றிருந்ததால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சில அமைச்சர்கள் அதனைப் பகிஷ்கரித்திருந்தனர்.

புறம்பான கட்சித்தலைவர்களுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படியும் பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அதற்கமைய மாகாண சபைத் தேர்தல், கொழும்பு போர்ட் சிட்டி உட்பட ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் பற்றி வரும் 4ஆம் திகதி நடைபெறும் கட்சித்தலைவர்கள் சந்திப்பில் பேசப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like