உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரகசியதகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று சில தரப்பினரால் கத்தோலிக்க மதகுருமார்க்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள கத்தோலிக்க தேவாலய மதகுருமார்க்கே குறித்த அறிக்கை கையளிக்க்பட்டுள்ளதாக தகலவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அவ்வாறான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்குமாயின் அதனை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதானியினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.