அம்பியூலன்ஸ் சேவைக்கு தினமும் வரும் 5000 அழைப்புக்கள்

நாளொன்றிற்கு 1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு 5300ற்கும் அதிக தொலைபேசி அழைப்புக்கள் கிடைப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த அழைப்புக்களின் ஊடாக நாளொன்றில் ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

நாடு பூராகவும் 297, சுவசரி அம்பியூலன்ஸ் வண்டிகள் காணப்படுவதுடன், 1394 ஊழியர்கள் அவற்றில் கடமையாற்றி வருவதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், 112 அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கான தேவை காணப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்று நோய் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.

 

You May also like