மாகாணங்களுக்கு இடையே பயணத்தடை விரைவில்?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தால், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது 14 மாவட்டங்களில் 06 பொலிஸ் பிரிவுகளில் 98 கிராம சேவைப் பிரிவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை திருகோணமலை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலக நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

You May also like