நடிகர் பாண்டு மற்றும் கோமகன் உயிரிழப்பு!

தென்னிந்தி பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் பாண்டு, தனது 74வது வயதில் காலமானார்.

சென்னை − கிண்டியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையிலேயே, பாண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், கொரோனா தொற்றினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அவரது மனைவி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் சிறப்பான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் பாண்டு.

நடிகர் பாண்டு சிறப்பான ஓவியராகவும் இருந்தவர்.

அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான்.

திறமைமிக்க ஓவியரான பாண்டு, கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி, நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்துள்ளார்.

இதேவேளை

ஆட்டோகிராஃப்’ படத்தின் தேசிய விருது பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இயக்குநர் சேரனும் அப்போது அவர்களின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எஃப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் கோமகன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like