இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் ஊடுருவல் நிறுத்தவில்லை?

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்துள்ளவர்களினால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் வந்துள்ளதுடன், பிரதேச மக்கள் தகவல் வழங்கியதை தொடர்ந்தே இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறாயின், நாட்டுக்குள் உள்நுழைய பலவழிகள் இருப்பதாகவும், சட்டவிரோதமாக இவ்வாறுவருபவர்கள் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்குள் வந்துள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கபட்டுள்ள போதிலும், இரணடு நாட்களான முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை தனியாக தனிமைப்படுத்தி உரிய ஆய்வுகள் முன்னெடுக்க்பட்டிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள்வரும் நபர்கள் தொடர்பிலும், அவர்கள் எவ்வாறு நாட்டுக்குள் வருகின்றார்கள் என்பது குறித்தும் அவதானிக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

You May also like