மருத்துவமனையில் குவிந்த 20 சடலங்களில் ஐந்தில் கொரோனா

அரச மருத்துவமனை ஒன்றில் குவிந்த 20 சடலங்களில் 5 உடல்களில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வழங்கப்பட்ட சடலங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

இவ்வாறு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியான 5 உடல்களில் ஒருவர் பௌத்த பிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிபத்கொட, காலி-கடுகொட, காலி – அஹங்கம, நியாகம மற்றும் மாத்தறையை சேர்ந்தவர்களது சடலங்களிலேயே கோவிட் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like