முள்ளிவாய்க்காலில் மீண்டும் தோன்றிய ஆயுதங்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணியினை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்யும் போது போரில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் காணி உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வெடிபொருட்கள் காணப்படும் பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இனம் காணப்பட்ட வெடிபொருட்களை அகற்ற சட்ட நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளார்கள்.

கைக்குண்டு ஒன்றும்,மிதிவெடி ஒன்றும் காணியில் அடையாளம் காணப்பட்டுள்ளது

You May also like