இலங்கையில் மீண்டும் LOCKDOWN? இன்று மாலை விசேட அறிவிப்பு!

நாட்டில் உக்கிரமடைந்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அரச உயர்மட்டத்திற்கு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

ஒரு மாதத்திற்காவது நாட்டை முழுமையாக முடக்கும் செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுமையாக முடக்கப்படுமா அல்லது மாகாண, மாவட்ட எல்லைகள் பூட்டப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு இன்று மாலை வெளியாகவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவை சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போதே இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரம் உட்பட ஜீவநோபாயம் பாதிக்கப்படாத வகையில் தீர்மானத்தை எடுக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like