மாகாண, மாவட்ட எல்லைகளை மூட அரசாங்கம் தீர்மானம்?

கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டிற்காக தேவை ஏற்படும் பட்சத்தில் மாகாணங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கோ அல்லது ஒரு மாகாணத்திலிருந்து இன்னுமொரு மாகாணத்திற்கோ செல்ல கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் கொவிட் நிலைமை மாறி வருகின்ற நிலையில், வைரஸ் கட்டுப்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May also like