இன்று அதிகாலை முதல் மேலும் சில இடங்கள் முடக்கம்

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்ற பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1 கிராம உத்தியோகத்தர் பிரிவும், உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மொனறாகலை மாவட்டத்தில் 1 கிராம உத்தியோகத்தர் பிரிவும், உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

You May also like