LOCKDOWN செய்தால் கடைகள் திறக்கப்படுமா? விசேட அறிக்கை வெளியீடு

மாகாண மற்றும் மாவட்ட எல்லைகள் முடக்கப்படும் பட்சத்தில் பொருளாதார நிலையங்கள், கடைகள் மற்றும் அரசநிறுவனங்களிலும் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் அடங்கிய அறிக்கை அனைத்து மாவட்ட அதிபர்கள், செயலாளர் மட்டத்திலான அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி இந்த அறிக்கையை இன்று திங்கட்கிழமை அனுப்பிவைத்திருக்கின்றது.

அதற்கமைய அனைத்து அரச வங்கிகள், சதொச பல்பொருள் சந்தை மற்றும் சூப்பர் மார்க்கட்டுக்கள், மொத்த விற்பனை கூட்டுத்தாபனங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள், பொருளாதாரமத்திய நிலையங்கள், கூட்டுறவு மொத்த களஞ்சியங்கள் மற்றும் விநியோகப் பிரிவுகள் ஆகிய வர்த்தகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய செயற்பட அனுமதியளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை வரையறைக்கு உட்பட்டதாக சேவைக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

You May also like