மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் பயணக்கட்டுப்பாடு விதிப்பு!

கொரோனா தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாட்டை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், இன்று பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, மாகாணத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் கடைகள் மாலை 6 மணிக்குப் பின்னர் மூடிவைக்கும்படியு்ம அறிவித்திருக்கின்றார்.

மேலும் மாலை 06 மணிக்குப் பிறகு அவசியமான தேவைகளுக்காக மாத்திரமன்றி அநாவசியமான நடமாட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படிக்கு மக்களைத் தெரிவூட்டுமாறு பாதுகாப்புப் பிரிவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணித்திருக்கின்றார்.

You May also like