மாகாணம் விட்டு மாகாணம் செல்ல இன்றுமுதல் தடை

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள் ஒன்று கூடும் அனைத்து கூட்டங்களையும் இரத்துச்செய்தல், வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்ககூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், நோய் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

You May also like