தடுப்பூசி வேண்டுமா? இணையத்தளத்தில் பதிவுசெய்ய முந்துங்கள்!!!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

இதற்காக அரசாங்கம் இணையத்தளம் ஒன்றை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

அதில் உள்நுழைந்து, தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்தையும், நேரத்தையும் தெரிவுசெய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை மேல் மாகாணத்தைச் சேராதவர்கள்  வாடகை வீடுகளில் இருப்பவர்களாயின் தங்குமிடத்தின் உரிமையாளரிடம் கடிதமொன்றை பெற்றுவர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கீழே உள்ள லிங்க்கினை பயன்படுத்தி தடுப்பூசி இடம் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

https://www.echannelling.com/Echannelling/covid-vaccine

You May also like