திருகோணமலையில் நுழைந்தது பிரிட்டன் வைரஸ்

பிரித்தானியாவில் பரவி வரும் புதியவகை கொரோனா வைரஸ், திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

திருகோணமலை தொற்றுநோயியல்  பிரிவினால்,  கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர்,  கந்தளாய், சீனக்குடா மற்றும் உப்புவெளி  பிரதேசங்களில் இருந்து பிசிஆர் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த மாதிரிகள் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த  நிலையிலேயே, இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளில் 240 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், வைத்திய தேவைகளுக்காக மூன்று வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார பிரதிப் பணிப்பாளர்  வீ.பிரேமானந் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May also like