திஸ்ஸ எம்.பியின் கார் சில்லுகள் அறுப்பு- பொலிஸார் விசாரணை!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வாகனத்தின் சில்லுகள் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதா மிரிஹானை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வாகனம் கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்திட்டமாகிய மாதிவெல வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

 

You May also like