22000 பொலிஸார் களத்தில்; சிக்கினால் விபரீதம்

நாடளாவிய ரீதியில்   பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக  சுமார் 22 ஆயிரம்  பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவிதுள்ளார்

இதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், நேற்று 423    பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கண்டி 9 பிரதேசத்தில் 65 பேர் உட்பட மாத்தளை பகுதியில் 98 பேர் இவற்றுள் உள்ளடங்குவதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 11ஆயிரத்து 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையினை பெரும்பான்மையான மக்கள் கடைபிடித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அத்துடன் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் மேலதிக பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் , மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் மற்றும் , பொருளாதார விசேட மத்திய நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது

பயணத்தடையின் போதும் அமனுமதி வழங்கப்பட்டுள்ள துறைகளில் கடமையாற்றுபவர்கள் சுகாதார விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

 

You May also like