21ஆம் திகதிக்குப் பின் கட்டுப்பாடுகளா? அரசாங்கம் இன்று வழங்கிய பதில்

எதிர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 19 அல்லது 20ம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

அதைவிடுத்து, உலகில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம், யாராலும் முன்பே எதையும் கூற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

You May also like