பச்சையாக மீனை சாப்பிட்ட பேலியாகொட விற்பனையாளர்கள் (PHOTOS)

கொழும்பு பேலியாகொடை மீன் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று சில மீன் விற்பனையாயளர்கள் பச்சையாக மீன்களை சாப்பிட்டு மக்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து மற்றும் அதனால் கடல் வளத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்பினால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உட்கொள்வதிலிருந்து பலரும் விலகியிருக்கின்றனர்.

அதனால் மீன்விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like