ஜனாதிபதி-TNA சந்திப்பு இரத்து; காரணம் அம்பலம்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை நடத்த இருந்த பேச்சுவார்த்தை இறுதி தருணத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற இருந்தது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருந்தன.

எனினும் ஊடகங்கள் மூலமாக சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியான காரணத்தினால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்று ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இன்று ரத்து செய்யப்பட்ட சந்திப்பு பிறிதொரு நாளில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கூட்டமைப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

You May also like