மேலும் இரு வாரங்களுக்கு பயணத்தடை நீடிக்கப்படுமா?

பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தை எடுக்க நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகள் பாரிய அளவில் மீறப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை தொடரும் நீடிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

எவ்வாறாயினும் இந்தப் பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் ஓரளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May also like