பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய், பால்மா விலை உயர்கிறது?

பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலைகளே இவ்வாறு உயர்த்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் மாதம் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் இறக்குமதி தீர்வை 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவே பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணம் என்றும் அறியமுடிகின்றது.

You May also like