கம்மன்பிலவுக்கு எதிராக பிரேரணையில் சஜித் அணி சுபவேளையில் கையெழுத்து

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து சுபவேளையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 10 விடயங்களை முன்வைத்து அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருகின்ற 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

You May also like