கம்மன்பில பதவிவிலக வேண்டும்-மீண்டும் தெரிவித்த மொட்டுக்கட்சி

எரிசக்தி அமைச்சர் கம்மன்பிலவை பதவியிலிருந்து நீங்கும்படி வலியுறுத்தி அவருக்கு அனுப்பிவைத்த கடிதத்தை தாம் வாபஸ் பெறப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்திற்கு இன்று புதன்கிழமை வருகைதந்த அவர் அங்கு ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிடுகையில் மேற்படிக் கூறினார்.

You May also like