கேஸ் விலை அதிகரிப்பு பற்றி இன்று இறுதிப் பேச்சு?

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று பகல் வர்த்தகத்துறை அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெறும்.

அதற்கமைய கேஸ் நிறுவனங்களினால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட அதிகரிப்பைக் காரணங்காட்டி 500 ரூபா அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்கும்படியான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like