X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதி அர்ஜுன கைது

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதி அர்ஜுன ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று புதன்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 8.45 அளவில் ஆஜராகியிருந்தார்.

விசாரணையின் நிறைவில் அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று பிற்பகலில் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May also like