சமையல் எரிவாயு விலை உயர்வு பற்றி இன்றும் பேச்சுவார்த்தை!

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடலில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபு குழுவின் உறுப்பினர்களான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகத்துறை அமைச்கர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரைலயாடல் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like