GSP+ வரிச்சலுகையை காப்பாற்ற சட்டத்தை திருத்துகிறது இலங்கை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தியமைக்க அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, உள்நாட்டு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலுக்கமைய, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு வரும்படி அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று கூறியுள்ளார்.

அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற அரசாங்கம் விருப்பம் வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like