பதவி விலக முன் விமலுடன் அனுஷ மோதல்;தயாவும் நிராகரிப்பு?

கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பதவிவகித்துவந்த அனுஷ பெல்பிட்ட, அமைச்சர் விமல் வீரவன்சவுடன் வாக்குவாதம் செய்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்ட் சிட்டி தொடர்பான ஆவணங்களை அமைச்சர் விமல், அனுஷவுக்கு வழங்கியுள்ளார்.

அந்த ஆவணங்களை அனுஷ, சட்டமா அதிபருக்கு மேலதிக ஆலோசனையை பெற அனுப்பியுள்ளார்.

இதற்கு இடையே அமைச்சர் விமல் வீரவன்ச, ஆவணங்கள் திரும்பக் கிடைக்க தாமதம் குறித்து அனுஷவுடன் தொலைபேசியில் கருத்து மோதிக் கொண்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை தற்போது கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்னாயக்க அப்பதவியை ஏற்கப் போவதில்லை என்று கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You May also like