ஈஸ்டர் தாக்குதல்-மேலும் 42 பேருக்கு எதிராக அடுத்தமாதம் வழக்கு!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் 42 பேருக்கு எதிராக எதிர்வரும் ஜுலை மாதம் மூன்றாம் வாரமளவில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை 32 சந்தேக நபர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாவநெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு, லெக்டோவத்தையில் வெடிபொருட்கள் மீட்பு, வண்ணாத்திவில்லு சம்பவம், தஸ்லிம் மீதான துப்பாக்கிச்சூடு உட்பட 08 விதமான விடயங்களை வைத்து 32 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களுக்கமைய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தில் தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் குறைகூறுவதற்கான சாத்தியம் இல்லை என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

You May also like