யாழில் பிடுங்கி கம்பஹாவுக்கு வழங்கப்பட்ட எம்.பி ஆசனம்!

2020ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்திலிருந்து இதுவரை தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சந்தர்ப்பம் குறைக்கப்பட்டு கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 06 உறுப்பினர்களே தெரிவாக முடியும் என்பதோடு கம்பஹா மாவட்டத்திலிருந்து 19 உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.

அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் தளம்பல் ஏற்பட்டுள்ளதற்கமைய இந்த தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளது.

You May also like