இலங்கை சிறுவர்கள் ஆபத்தில்!!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் மத்தியில், புதியதொரு நோய் பரவி வருவதாக பொறளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் நலின் கித்துல்வத்த தெரிவிக்கின்றார்.

இதன்படி, சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குள் இந்த நோய்த் தொற்று ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நோய் தொற்றுக்குள்ளான 6 சிறுவர்கள், லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

8 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் மத்தியிலேயே இந்த தொற்று பரவுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

காய்ச்சல், அதிக உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண் சிவப்பு நிறமாகின்றமை உள்ளிட்ட சில நோய் அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நோய் தொற்றினால் இருதய பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தம் அதிகளவில் குறைவடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த புதிய நோய் தொற்று 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் முதலில் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த நோய் மிக பாரதூரமானது எனவும், பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொரள்ளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் நலின் கித்துல்வத்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May also like