பயணக்கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்படும்?

தற்போது பதிவாகிவருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் டார்டக் அசேல குணவர்தன இதனை கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது கூறினார்.

தற்போது நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்க 2000 தொடக்கம் 2200 வரை பதிவாகிவருகின்றனர். அதனால் பயணக்கட்டுப்பாடுகளை மேலும் அதிகமாக மக்கள் பின்பற்ற வேண்டும். எனினும் பயணத்தடை தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சில இடங்களில் மக்கள் நடமாடிய விதம் கவலைக்குரியதாகும். அவ்வாறு மக்கள் தொடர்ந்தும் செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகள்தான் மேலும் கடுமையாக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

You May also like