பேராதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்குப் பலி!

கொவிட் தொற்றுக்குள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவமொன்று கண்டி – பேராதனை பகுதியில் பதிவாகியுள்ளது.

பேராதனை – முருதலாவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

72 வயதான தந்தை, 70 வயதான தாய் மற்றும் 38 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளான குறித்த மூவருக்கும், பல்வேறு தருணங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளனர்.

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மூவரும், பெனிதெனிய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May also like