மைத்திரி-விமல்-கம்மன்பில Zoom ஊடாக பேச்சு-கூட்டணிக்கு ஆயத்தம்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டணி அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சினை நடத்தியிருக்கின்றார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த சந்திப்பானது Zoom ஊடாக நடத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

இச்சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டிருப்பதாக மைத்திரியின் நெருக்கமான இடத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

அந்த வகையில் மிகப்பெரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு இந்த மூவரும் இணக்கம் வெளியிட்டிருக்கின்றனர். அடுத்தகட்டப் பேச்சில் மேலும் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

You May also like