நாடு முழுதும் மீண்டும் பயணத்தடையா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

நாடு முழுவதிலும் இனியும் பயணத்தடை விதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதிலளித்திருக்கின்றார்.

அதற்கயை இனி நாடளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒருபோதும் விதிக்கப்படாது என்று அவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவிக்கின்றார்.

You May also like