நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது விவாதம்? 06ஆம் திகதி முடிவு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சனிக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த பிரேரணையை எப்போது விவாதத்திற்கு அனுமதிப்பது குறித்து அடுத்த கட்சித்தலைவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி கட்சித்தலைவர்கள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா சபாநாயகர் தெரிவிக்கின்றார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றத்தை செய்த அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

You May also like