தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் விசேஷ அறிவிப்பு

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சேவைகளை இணையத்தளம் ஊடாக  முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம்  முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சேவைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேரஹெர, பொலனறுவை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அலுவலகங்கள் ஊடாக குறித்த சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அலுவலகங்களின் ஊடாக மீள சேவைகளை வழங்கும் தினம் மற்றும் நேரம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

You May also like