இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவம்: அதிரடி தகவல் இதோ!

இலங்கை அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவி நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கடசந்த வாரம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி Mark Birnboum என்பவரே இவ்வாறு நாட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி சுற்றுலா விசா ஊடாக மேலும் 4 அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகவும் அதுகுறித்து தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

USAID என்ற அரச சார்பற்ற நிறுவனம் இவர்களை இலங்கைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like